காமத்துப்பால்,
திருக்குறள்
திருக்குறள் - காமத்துப்பால் - களவியல் - நலம்புனைந்துரைத்தல்
1/04/2015 11:32:00 AMகுறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
மு.வ உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.Translation:
O flower of the sensitive plant! than theeExplanation:
More tender's the maiden beloved by me.
May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
மு.வ உரை:
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.Translation:
You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,Explanation:
That many may see; it was surely some folly that over you stole!.
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
மு.வ உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.Translation:
As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;Explanation:
Darts are the eyes of her whose shoulders like the bambu bend.
The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
மு.வ உரை:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.Translation:
The lotus, seeing her, with head demiss, the ground would eye,Explanation:
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie'.
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one".
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
மு.வ உரை:
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.Translation:
The flowers of the sensitive plant as a girdle around her she placed;Explanation:
The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist.
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
மு.வ உரை:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.Translation:
The stars perplexed are rushing wildly from their spheres;Explanation:
For like another moon this maiden's face appears.
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
மு.வ உரை:
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.Translation:
In moon, that waxing waning shines, as sports appear,Explanation:
Are any spots discerned in face of maiden here?.
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
மு.வ உரை:
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.Translation:
Farewell, O moon! If that thine orb could shineExplanation:
Bright as her face, thou shouldst be love of mine.
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?.
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
மு.வ உரை:
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.Translation:
If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,Explanation:
Shine for my eyes alone, O moon, shine not for all to see!.
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
மு.வ உரை:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.Translation:
The flower of the sensitive plant, and the down on the swan's white breast,Explanation:
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.
0 comments