குறள் 981:
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.Translation:
All goodly things are duties to the men, they sayExplanation:
Who set themselves to walk in virtue's perfect way.
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
குறள் 982:
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
மு.வ உரை:
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.Translation:
The good of inward excellence they claim,Explanation:
The perfect men; all other good is only good in name.
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
மு.வ உரை:
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.Translation:
Love, modesty, beneficence, benignant grace,Explanation:
With truth, are pillars five of perfect virtue's resting-place.
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.
குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
மு.வ உரை:
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.Translation:
The type of 'penitence' is virtuous good that nothing slays;Explanation:
To speak no ill of other men is perfect virtue's praise.
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.
குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
மு.வ உரை:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.Translation:
Submission is the might of men of mighty acts; the sageExplanation:
With that same weapon stills his foeman's rage.
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.
குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
மு.வ உரை:
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.Translation:
What is perfection's test? The equal mind.Explanation:
To bear repulse from even meaner men resigned.
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.
குறள் 987:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
மு.வ உரை:
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.Translation:
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?.Explanation:
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
குறள் 988:
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
மு.வ உரை:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.Translation:
To soul with perfect virtue's strength endued,Explanation:
Brings no disgrace the lack of every earthly good.
Poverty is no disgrace to one who abounds in good qualities.
குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
மு.வ உரை:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.Translation:
Call them of perfect virtue's sea the shore,Explanation:
Who, though the fates should fail, fail not for evermore.
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.
குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
மு.வ உரை:
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.Translation:
The mighty earth its burthen to sustain must cease,Explanation:
If perfect virtue of the perfect men decrease.
If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.
0 comments